ஏப்ரல் 1 முதல் லாக்கர் வாடகை உயர்வு… எச்.டி.எப்.சி. அதிர்ச்சி அறிவிப்பு !

 
எச்டிஎப்சி

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சி லாக்கர் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதிய கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2026 ஏப்ரல் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எச்.டி.எப்.சி.

புதிய கட்டண முறையில் “மெட்ரோ பிளஸ்” என்ற புதிய நகரப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிளை அமைந்துள்ள நகரத்தின் வகை மற்றும் லாக்கரின் அளவைப் பொறுத்து ஆண்டு வாடகை நிர்ணயிக்கப்படும். மெட்ரோ பிளஸ், மெட்ரோ, நகர்ப்புறம், அரை நகர்ப்புறம், கிராமப்புறம் என பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து லாக்கர் கட்டணங்களுக்கும் கூடுதலாக 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும்.

மெட்ரோ பிளஸ் நகரங்களில் மிகச் சிறிய லாக்கர் ரூ.4,000 முதல் மிகப் பெரியது ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில் ரூ.3,300 முதல் ரூ.20,000 வரை இருக்கும். கிராமப்புறங்களில் மிகச் சிறியது ரூ.1,000 முதல் மிகப் பெரியது ரூ.8,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் புதிய கட்டண விவரங்களை முன்கூட்டியே அறிந்து செயல்படுவது நல்லது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!