"பர்தா" போட்ட முன்னாள் வங்கி ஊழியர்... லாக்கரில் நகையைத் திருடிவிட்டு மீண்டும் வைக்க வந்தபோது வசமாகச் சிக்கிய சோகம்!

 
bank locker bank locker

சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கிளையில் நடந்த இந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம், சினிமா படக் காட்சிகளையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி வங்கி வளாகத்தில் ஒரு மணிபர்ஸ் கிடப்பதைக் கண்டெடுத்த கிளை மேலாளர் அகமது காதிரி, அதைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். அதில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 கிலோவுக்கும் அதிகமான (1156.50 கிராம்) தங்க நகைகள் இருந்துள்ளன.

யாராவது வாடிக்கையாளர்கள் தவறவிட்டிருப்பார்களோ என்று எண்ணி 5 நாட்கள் காத்திருந்தும் யாரும் உரிமை கோராததால், மேலாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த பர்ஸைத் தவறவிட்டுச் சென்றது உறுதியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் அதிரடி விசாரணையில் அந்தப் பெண் அதே வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் பத்மபிரியா என்பது தெரியவந்தது.

ஏற்கனவே வங்கி லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த பத்மபிரியா, தான் செய்த திருட்டு வெளியே தெரியாமல் இருக்க ஒரு "பக்கா பிளான்" போட்டுள்ளார். திருடிய நகைகளை மீண்டும் லாக்கருக்குள்ளேயே ரகசியமாக வைத்துவிட்டால் தப்பித்துவிடலாம் என எண்ணி, அடையாளம் தெரியாமல் இருக்கப் பர்தா அணிந்து வங்கிக்கு வந்துள்ளார். ஆனால், அங்கு நிலவிய கெடுபிடிகளால் பதற்றமடைந்த அவர், நகைகளை வைக்க முடியாமல் பர்ஸை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

மேலாளர் கொடுத்த புகாரால் பத்மபிரியாவின் கில்லாடித் திட்டம் தவிடு பொடியானது. தற்போது மீண்டும் கைதாகியுள்ள அவரிடம், வேறு எங்கும் இது போன்ற கைவரிசையைக் காட்டியுள்ளாரா என்று போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வங்கியின் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே புகுந்து முன்னாள் ஊழியரே இப்படி ஒரு துணிகரச் செயலில் ஈடுபட்டது வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!