ஜனவரி 27ம் தேதி வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்… 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (UFBU), ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் 5 நாள் வேலை வாரம் அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 24 நான்காவது சனி, 25 ஞாயிறு, 26 குடியரசு தின விடுமுறை என்பதால், 27ல் வேலைநிறுத்தம் நடந்தால் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் இயங்காது. இதனால், மீண்டும் ஜனவரி 28ஆம் தேதி அன்றுதான் வங்கிகள் திறக்கப்படும் நிலை உருவாகும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால் நேரடி பணப் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை, கடன் தொடர்பான பணிகள் பாதிக்கப்படலாம். ஆனால், ஏடிஎம் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவையுள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
