அட... மாடு விடும் விழாவில் மணமகள் தேடும் பேனர்… !

 
இளைஞர்

திருமணத்திற்கு இளம்பெண் தேவை என திருமணமாகாத இளைஞர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் குழந்தைகள் பிறப்பு குறைவதும், பெண்கள் அதிகமாக படித்து வேலைக்கு செல்வதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சம்பளம், வசதி, அரசு வேலை, வெளிநாடு வேலை போன்ற பல எதிர்பார்ப்புகள் திருமணத்தில் அதிகரித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதனால் பல இளைஞர்கள் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதற்காக பல இடங்களில் திருமண தகவல் மையங்களும் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர்கள் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரிப்பள்ளே கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் விழாவில் இந்த பேனர் வைக்கப்பட்டது. வழக்கமான வரவேற்பு பேனருக்கு பதிலாக, இளைஞர்களின் புகைப்படத்துடன் பெயர், ராசி, நட்சத்திரம், குடும்ப விவரங்கள் இடம்பெற்றிருந்தன. “திருமணத்திற்கு இளம்பெண்கள் தேவை” என்ற வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!