பகீர் வீடியோ!! 4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி எறிந்த காளை!!

 
காளை

தெருமுனை டீக்கடை முதல் மல்ட்டி ப்ளக்ஸ் சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்கள் வரை நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் சோஷியல் மீடியாக்களில் பகிர்வதில் ஆர்வத்துடன் இளைய தலைமுறை செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுபநிகழ்வுகள் தான் என்றிலை ஆபத்து காலங்கள், விபரீதங்கள் ,  துக்கவீடுகள் எதிலும் வைரலாக்கும் முயற்சி தானே தவிர அந்த நேர உதவிகள் என்ன தேவைப்படும், எதை செய்யலாம் என்ற யோசனைகள் இல்லாமலேயே அலட்சிய மனோபாவத்துடன் வளர்ந்து வருகிறது


இன்றைய இளைய தலைமுறை. இதே போல் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் காளை ஒன்று குழந்தையை முட்டிய தள்ளிய நிகழ்வை படம்பிடித்து வைரலாக்கியுள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில்  தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.

காளை

மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்துவிட்டது. குழந்தை கூக்குரலிட்டது. இந்த  சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில்  தெருவில் சுற்றித் திரிந்த காளையை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web