பகீர் வீடியோ!! பெண் பேராசிரியரை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்!!

 
செந்தில்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் வஉசி சாலை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி 53 வயது சீதாலட்சுமி . இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசிசி துறைத் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். தினசரி நடைப்பயிற்சி செல்வது இவரது வழக்கம். மார்ச் 12ம் தேதி வழக்கம் போல்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றார். அப்போது  மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த சீதாலெட்சுமியை, நாயை இழுத்துச் செல்வது போல தரதரவென்று இழுத்து ஓரமாக வீசிவிட்டு  அவரின்  இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட அந்த மர்ம  நபர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியில் வசித்து வரும் 32 வயது  செந்தில்குமார்  என்பது தெரியவந்தது.  மேலும் அவர் குடிபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருந்ததை உறுதி செய்து அவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.  

செந்தில்

செந்தில் திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி, அவரை தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகள்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web