பகீர் வீடியோ!! கண்ணாமூச்சியில் விபரீதம்!! நாடு கடத்தப்பட்ட சிறுவன்!!

 
சிறுவன்

தூங்கி எழுந்தால் எந்த துக்கமும் கரைந்து விடும். தூக்கம் தான் மனிதனுக்கு அடிப்படை என என்னவெல்லாமோ படித்திருக்கிறோம். ஆனால் தூங்கியதாலேயே நாடுவிட்டு நாடு போயிருக்கிறான் ஒரு சிறுவன்.  வங்கதேசத்தில் சிறுவர்கள் பலர் இணைந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்படி  15 வயது சிறுவன் ஒருவன் கண்ணாமூச்சியை விளையாடிக் கொண்டிருந்தபோது  ஒளிந்து கொள்வதற்காக அங்கு நின்றிருந்த கண்டெய்னரில் ஏறினான். சிறிது நேரம் ஆகியும் நண்பர்கள் யாரும் அவனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. மிகவும் சந்தோஷத்தில் இருந்த அச்சிறுவனுக்கு சிறிது நேரத்தில் தூக்கம் வந்தது. தூங்கி விட்டான்.

ஆனால் அவன் ஏறிய கண்டெய்னர் அதற்குள்  பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று விட்டது.  அந்த சிறுவன் வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங்கை சேர்ந்த ஃபாஹிம்.  இவன் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த போது தான் இந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது. அப்போது விளையாட்டின் ஒரு பகுதியாக தான் அந்த சிறுவன் ஒளிந்து கொள்ள அங்கே இருந்த கண்டெய்னருக்கு உள்ளே சென்றுள்ளான்.  அது கப்பலில் ஏற்றி வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கண்டெய்னர் . அங்கிருந்த அதிகாரிகள் அந்த கண்டெய்னரை மலேசியாவிற்கு அனுப்பி விட்டனர். கொஞ்ச நேரத்தில் எழுந்த அந்த சிறுவனுக்கு எங்கு இருக்கிறோம் எனப் புரியவில்லை.

கண்டெய்னர் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், வெளியே  செல்லவும் வழி தெரியவில்லை. கத்தியும் கதறியும் பார்த்துள்ளான். இருப்பினும், சிறுவனின் அலறல் சத்தம் வெளியே யாருக்கும் துளி கூட கேட்கவில்லை. இதனால் பயத்திலேயே தனிமையில் அந்த சிறுவன் கண்டெய்னரில் காலத்தைக் கழித்து வந்தான்.  6 நாட்கள் கழித்து தான் மலேசியாவில் அந்த கண்டெய்னரை திறந்து பார்த்த அதிகாரிகள் சிறுவனைப் பார்த்தவுடன் மிரண்டு போய்விட்டனர். சுமார் 2,300 மைல் தூரத்திற்கு அந்த சிறுவன் கண்டெய்னரிலேயே பயணித்துள்ளனர். இது  குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அந்த சிறுவன் கண்டெய்னரிலேயே இருந்ததில் அவனது உடல்நிலை மோசமான பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிறுவன்
அதிகாரிகள் அந்த சிறுவனைக் கண்டுபிடித்த போது, அவனுக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.  இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் “சிறுவன் கன்டெய்னரில் நுழைந்து, தூங்கிவிட்டான்.. இங்கு மலேசியாவில் கண்டெய்னரை திறந்த போது அதிகாரிகளை அவனைக் கண்டுபிடித்தனர்” எனக் கூறியுள்ளார். முதலில் கண்டெய்னருக்குள் சிறுவனைப் பார்த்தவுடன் மலேசியா அதிகாரிகள் அச்சிறுவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டது. சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின், சிறுவன் மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web