பாராமதி விமான விபத்து… ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்றார். பாராமதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
விபத்தில் அஜித் பவாருடன் அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த உடனே தீப்பற்றி எரிந்ததால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. இந்த கோர விபத்து மராட்டிய மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து, அவரது அகால மரணம் மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
