கமிஷனே இல்ல... ஓலா, உபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ செயலி அறிமுகம்!

 
பாரத் டாக்ஸி பாரத் டாக்ஸி

ஓலா, உபர் போன்ற சேவைகளுக்கு போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ செயலியை மத்திய கூட்டுறவுத் துறை இன்று அறிமுகம் செய்கிறது. தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா செயலியை தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 2.5 லட்சம் வாகனங்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த செயலியில் பைக், ஆட்டோ மற்றும் கார்களை உள்ளூர், வெளியூர் மற்றும் ரவுண்ட் டிரிப் முறையில் பதிவு செய்யலாம். ஓட்டுநர்கள் பெறும் தொகையில் எந்த கமிஷனும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலி பராமரிப்புக்காக நாளொன்றுக்கு ரூ.30 மட்டும் செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள செயலிகளுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் வரை கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.

பயணிகள் பாதுகாப்பிற்காக சிறப்பு அம்சங்கள் மற்றும் உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. புகார்களை தீர்க்க தில்லி காவல்துறையுடன் இணைந்து 35 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் தில்லி மற்றும் குஜராத்தில் சோதனை முறையில் அறிமுகமான இந்த செயலி தினமும் ஆயிரக்கணக்கான பயணங்களை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் செயலியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!