டெல்லி, குஜராத்தை தொடர்ந்து தமிழகத்திலும் “பாரத் டாக்ஸி”!

 
.barath taxi

 

இன்றைய வேகமான வாழ்க்கையில் வாடகை இருசக்கர வாகனங்கள், கார்கள் அன்றாட தேவையாகிவிட்டன. ஆனால் ‘பீக் ஹவர்’ நேரங்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது. இதற்கு தீர்வாக மத்திய அரசு “Bharat Taxi” என்ற புதிய செயலியை நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

தற்போது செயல்படும் தனியார் செயலிகள் ஓட்டுநர்களிடமிருந்து 30 சதவீதம் வரை கமிஷன் பெறுகின்றன. இதனால் ஓட்டுநர்களின் வருமானம் குறைவதோடு, கூடுதல் கட்டணமாக பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ‘பாரத் டாக்ஸி’ செயலியில் கமிஷன் வசூல் செய்யப்படாது என்பது முக்கிய அம்சமாகும். இதனால் ஓட்டுநர்களுக்கு முழு வருமானமும், பயணிகளுக்கு சீரான கட்டணமும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் விரைவில் அறிமுகப்படுத்த தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது அமலுக்கு வந்தால், நடுத்தர மக்களின் பயணச் செலவு குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!