பாரதிராஜா உடல்நிலை இப்போ எப்படி இருக்கு... மருத்துவமனை விளக்கம்!
‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கி கவனம் பெற்றார். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார்.

பாரதிராஜாவின் ஒரே மகனும் நடிகர், இயக்குநருமான மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென காலமானார். இந்த இழப்பு அவரை கடும் மனவேதனையில் ஆழ்த்தியது. இதையடுத்து சில மாதங்கள் மலேசியாவில் உள்ள மகள் வீட்டில் ஓய்வெடுத்த அவர், சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
