தொடரும் கனமழை... குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை!
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்க்கிறது. நேற்று மாலை தொடங்கிய மழை இரவும் விடிய விடிய பெய்து, இன்று காலைமுதல் மீண்டும் பலத்த மழை தொடர்ந்ததால் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி சிறிய அளவில் வெள்ளப்பெருக்கை உருவாக்கியுள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்குள் கூட மழைநீர் புகுந்த நிலையில், தூத்துக்குடியின் பல இடங்கள் வெள்ள நீரில் சிக்கியுள்ளது. நெல்லை நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ. என அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.

கனமழையின் தாக்கத்தால் குற்றால அருவிகளில் நீர்வத்து திடீரென அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பின்னர் பெய்த மழை காரணமாக நிலைமை ஆபத்தானதாக மாறியதால், இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் குளியல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நுழைவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்யும் எச்சரிக்கை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை துறை வழங்கியுள்ளது. நிலைமை இயல்பு திரும்பும் வரை சுற்றுலா பயணிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
