குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை!

 
குற்றாலம்
 

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக தாக்கி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை அதிகரித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர். கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை செல்பவர்கள் கூட இங்கு நீராடிச் செல்லுவதால் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.

குற்றாலம்

இதனை அடுத்து, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவிகளின் நீர்மட்டம் உயரும் நிலையில், அதன் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கொல்லிமலை, குற்றாலம்

ஏற்கெனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கைக்கு இணங்க குற்றாலத்தில் எடுக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயணிகளிடையே கவனத்தை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!