குற்றால அருவிகளில் குளிக்க தடை!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!!

 
குற்றாலம்

தென்மேற்கு பருவமழை தொடங்கி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  தொடர்மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில்  குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் தண்ணீர் விழ ஆரம்பிக்கும். குற்றால சீசன் தொடங்கி விடும்.

குற்றாலம்

 இந்த காலகட்டத்தில்  குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.  இந்நிலையில் கனமழையால் நீர்வரத்து அதிகரிதுள்ளது .

குற்றாலம்

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள்  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி , பழைய குற்றாலம் , பிரதான அருவி உட்பட  அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web