குற்றால அருவிகளில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம்...!!

 
குற்றாலம்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா  மற்றும் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசியில்   பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல்  மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை  முதல் தென்காசி குற்றாலம் செங்கோட்டை  சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

குற்றாலம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும்  கடந்த சில  நாட்களாக நேற்று இரவு முதல் தொடர்  கனமழை பெய்து வருகிறது.  

குற்றாலம்

இதனால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து  திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  பேச்சுப் பாறை அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இன்று காலையில் ஒரு பகுதியில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால்  தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள்   தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web