புதுச்சேரியில் போர்க்களம்... மோடி உருவபொம்மை எரிப்பு - கல்வீச்சில் எஸ்பி உட்பட 5 பேர் காயம்!

 
பாஜக

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புதுச்சேரி பாஜகவினர் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்த நிலையில், அதற்குப் பதிலடியாகக் காங்கிரஸ் கட்சியினர் இன்று பிரதமரின் உருவபொம்மையை எரித்ததால் வன்முறை வெடித்தது.

டெல்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய அரை நிர்வாணப் போராட்டத்தைக் கண்டித்துப் புதுச்சேரி பாஜக இளைஞரணியினர், காங்கிரஸ் அலுவலகம் முன்பு ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர். இதற்குப் போட்டியாக இன்று காங்கிரஸ் கட்சியினர் எல்லைபிள்ளைச்சாவடியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை அவர்கள் எரித்ததால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மோடி

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை எஸ்பி வம்சிதரெட்டி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் இரு தரப்பு நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்:

இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்த விவகாரத்தில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் ஆடலரசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புதுச்சேரியில் நிலவும் இந்தச் சூழல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!