உஷார்!! GPay மூலம் பணம் அனுப்பினால் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்!!

 
கூகுள் பே மூலம் லஞ்சம்! 3 காவலர்கள் பணியிட மாற்றம்!  கோவை எஸ்.பி. அதிரடி!!

இந்தியா முழுவதும் படிப்படியாக  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பெட்டிக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் வரை GPAY ,Phonepe, Paytm என  பல UPI செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் பணம் அனுப்புவதும், பெற்றுக் கொள்வதும் மிக எளிதாகி வருகிறது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர்.

கூகுள் பே

எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன. ஆனால் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி  ஜிபே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜிபேவுக்கு பணத்தை அனுப்பி வைப்பார். அவரெ உங்களுக்கு போன் செய்து  உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப சொல்லி கேட்கிறார்.  உடனே பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையத்தில் புகார் அளித்து நேரில் வந்து பணமாக எடுத்து கொள்ளச் செல்லுங்கள் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

யுபிஐ
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யாரோ ஒருவர் தவறாக உங்கள் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டதாக கூறி பணம் திருப்பி கேட்டால் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும். அதே போல் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web