உஷார்!! ஏசியை இப்படி பயன்படுத்தினா கரண்ட் பில் எகிறிடும்!! கவனமா இருங்க!

வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த 2 நாட்களாக மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. பள்ளிப் பிள்ளைகளுக்கு கோடை விடுமுறையும் விரைவில் விடப்படும். நாள் முழுவதும் பிள்ளைகள் ஏசி ரூமை விட்டு வெளியில் வரவே வராது. சிலர் பழைய ஏசியை சர்வீஸ் பண்ணி தயாராக வைப்பர். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக புது ஏசியில் தான் நல்ல குளிர் என கூறி ரூமுக்கு ஒன்றாக புது ஏசியை மாட்டி விடுவர். என்னதான் புது ஏசி வாங்கினாலும் கரண்ட் பில்லுக்கு பயந்து குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் அதை பயன்படுத்துவோம்.
பெற்றோர்களுக்கோ கரண்ட் பில் எவ்வளவு வருமோ என்பதிலேயே தூக்கம் வராம துக்கம் தொண்டைய அடைச்சிடும். ஏசி இல்லாமலும் நாட்களை கடத்துவது கஷ்டமான காரியம். ஏசியும் போடணும். கரண்ட் பில்லும் கம்மியா வரணுமா? அதுக்கு சில நடைமுறைகளை சரியா ஃபாலோ பண்ணினாலே போதும். புதிய ஏசி வாங்கினால் ரேட்டிங் பார்த்து வாங்க வேண்டு. 5 ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அந்த ஏசி மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
இன்வெர்ட்டர் ஏசி 35% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது ஏசி பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்.சூரிய வெளிச்சம் நேரடியாக படாத அறைகளுக்கு குறைவான திறன் கொண்ட ஏசியே போதும் என்கின்றனர் ஏசி மெக்கானிக்குகள். இன்னும் சிலர் ஏசியை எப்போதும் 17 அல்லது 18 ல் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மிகவும் தவறு. கரண்ட் பில் அதிகரிப்பதற்கான முதல் காரணம் இது தான். ஏசியின் வெப்பநிலை 24 டிகிரியே போதுமானது. இதற்கு கீழ் வெப்பநிலையை குறைக்க குறைக்க ஏசி பில் எகிறி விடும். கவனமா இருங்க இல்லத்தரசிகளே.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க