உஷார்...! குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நடுராத்திரியில் நேர்ந்த கொடூரம்... எச்சரிக்கையா இருங்க!

 
ஜதின் ஷர்மா

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும், சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கோடை சுற்றுலாவுக்கு பொதுமக்கள் திட்டமிடுவார்கள். வருடத்தில் இந்த கோடை விடுமுறைக்காக வருடம் முழுவதுமே காத்திருந்து பணம் சேர்த்து வைக்கிற குடும்பங்களும் இருக்கின்றன. அதே சமயம் உங்கள் கோடைச் சுற்றுலா பாதுகாப்பாகவும் இருப்பது போல் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடுங்க. இப்படி தான் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது, திடீரென நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த மர்ம கும்பலால் வாள் மற்றும் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஜதின் ஷர்மா என்பவர் தங்களது குடும்பத்தினருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அஞ்சுனாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவில் அறை எடுத்து தங்கினர்.  இந்நிலையில், அவரது அறையில் இரவில் திடீரென புகுந்த நான்கு பேர், ஜதின் ஷர்மா குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், வாள் கத்தியால் தாக்கப்பட்டத்தில் பெரும் காயமடைந்து மயங்கினர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில், ஜதின் ஷர்மா இந்த கொடூரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஜதின் ஷர்மா வெளியிட்ட பதிவின்படி, ஹோட்டல் ஊழியர்கள் குறித்து மேலாளரிடம் அவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர், ஜதினின் குடும்பத்தை கிட்டத்தட்ட நான்கு பேர் தாக்கியதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அஞ்சுனா போலீசார் முதலில் பிரிவு 324 இன் கீழ் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் எச்சரிக்கையின் பேரில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. சுற்றுலா வந்த வெளிமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என பலரும் விமர்சித்தனர். சுற்றுலாவை பெரும் வருமானமாக நம்பியுள்ள கோவாவுக்கு இது பெரும்  பிரச்னையாக வெடித்தது.

ஜதின் ஷர்மா

பின்னர், இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டார். போலீசார் எஃப்ஐஆரில் 307-வது பிரிவைச் சேர்த்தனர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூவரை மீண்டும் கைது செய்தனர்.  மற்றொருவரை தேடி வருகின்றனர். 

கோவா முதல்வர் ட்விட்டரில், அஞ்சுனாவில் நடந்த வன்முறை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் சகிக்க முடியாதது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சமூக விரோத சக்திகள் மாநிலத்தில் உள்ள மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன, மேலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று சாவந்த் பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web