மக்களே எச்சரிக்கையா இருங்க!! வெயிலை சமாளிக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
வெயில்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருக்கிறது. அத்துடன் மழைக்காலம் முடிந்து இப்போதே  கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளவும் மத்திய சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 

வெயில்
இதனோடு கோடைகால நோய்களும் சேர்ந்து கொள்ளலாம். இதனால்  குழந்தைகள், பெரியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும்  என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 
1. பிற்பகல்  12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 
2. குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். 
3. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டல்  சுயமருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். 

வெயில்
4. அத்தியாவசியமான பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களும் செல்பவர்களும்  குடையுடன் செல்வது நல்லது.
5. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள உடலை முழுவதுமாக மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். 
6. அத்துடன் வெப்பதால் ஏற்படும் பக்கவாதம், உயிரிழப்புக்களை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web