மக்களே உஷாரா இருங்க!! வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர் !!

 
கொரோனா ஸ்டிக்கர்

இந்தியாவின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும்  கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல்  மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா ஸ்டிக்கர்

அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளது. அத்துடன் திரையரங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, சென்னை மாநகராட்சி, சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இத்துடன் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்கவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web