இன்று முதல் இந்த பகுதிகளில் மாஸ்க் கட்டாயம்! அதிரடி உத்தரவு!

 
மாஸ்க்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே  கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் தமிழகத்தில் சமீபமாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. ஆயிரங்களில் இருந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 10,000யைத் தாண்டி வருகிறது. தமிழகத்திலும் இரட்டைப்படை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

மூன்றாவது அலை வருமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11000க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாஸ்க்

இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ம் தேதி முதல் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் நாளை முதல் முக கவசம் கட்டாயம். தனி மனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல், இன்று  முதல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web