எச்சரிக்கையா இருங்க மக்களே!! இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை ?!

 
வெயில்

மார்ச் மாதம் இன்று  தான் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. சாலையோரங்களில் திடீர் தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரிக்காய், கரும்புச்சாறு கடைகள் இடம் பிடிக்க தொடங்கி விட்டன. ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் வாட்டி வதைக்கும்.  கடந்த சில வருடங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

வெயில்

இந்தியாவை பொறுத்தவரை 1901ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிஇருப்பதாகவும், வெயிலின் தாக்கமும் அதிகமாகும் எனவும்,  மார்ச் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திடீரென வெப்பநிலை உயர்ந்திருப்பதாகவும், அதற்கான தடுப்பு முறைகள்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளவும்  மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வெயில்

வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அத்துடன் கோடைகாலங்களில் அதிக வெயிலால் ஏற்படும் வெப்ப அலைகளை எதிர்கொள்ளவும் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web