ஜாக்கிரதை மக்களே... வெடிக்க தயாராகுது எரிமலை.. பொதுமக்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! வாயுவை வெளியேற்றுவதால் பதற்றம்!

 
நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை

கொலம்பியாவின் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை தொடர்ந்து வாயுவை வெளியேற்றி வருவதால், எந்த நேரத்தில் வெடிக்கலாம் என்று கொலம்பியா புவிவியல் ஆய்வு மையம் பொதுமக்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாக்கிரதையாக இருங்க மக்களே... வாயுவைத் தொடர்ந்து எரிமலை வெளியேற்றி வருவதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எரிமலை வெடித்து சிதறலாம் என்றும், பொதுமக்கள், உள்ளூர்வாசிகள், அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனே  நகருங்க என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இப்படி எரிமலைத் தொடர்ந்து வாயுவை வெளியேற்றி வருவதால், புற்றுநோயாளிகள், நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள், வயதானவர்கள் மேலும் மூச்சு விட சிரமப்படலாம் என்று தெரிவித்துள்ளது. தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் டோலிமா மற்றும் கால்டாஸ் மாகாண எல்லையில் இந்த எரிமலை உள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஒரு வார காலமாக இந்த எரிமலைத் தொடர்ந்து இப்படி வாயுவை வெளியேற்றி கொண்டிருக்கிறது. 

எஸ்ஜிசி அறிக்கையின் படி, டெல் ரூயிஸ் எரிமலை, வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அந்த பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளை தயாராக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக அருகிலுள்ள லாஸ் நெவாடோஸ் தேசிய பூங்காவையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

வெடிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து பள்ளத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தரம் ஒரு கவலையாக இருக்கலாம். இப்பகுதியில் உள்ள நபர்கள், குறிப்பாக ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) அல்லது நுரையீரல் புற்றுநோய்கள் போன்ற நுரையீரல் நிலைகள் உள்ளவர்கள், சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கலாம் மற்றும் உடல் உழைப்புக்கு குறைந்த சகிப்புத்தன்மையால் பாதிக்கப்படலாம்.

Colombia

வரும் நாட்களில் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட்டதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web