இன்றும், நாளையும் கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து!

 
மின்சார ரயில்

இன்று மார்ச் 6ம் தேதியும் நாளை மார்ச் 7ம் தேதியும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார ரயில்

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே இன்றும், நாளையும் (மாா்ச் 6, 7) ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.30 முதல் 2 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.15, 1.15, 1.30, 2-க்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.05, 12.35, 1-க்கு புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

பறக்கும் ரயில்

செங்கல்பட்டிலிருந்து காலை 10.40, முற்பகல் 11, 11.30 மற்றும் நண்பகல் 12 மணிக்கும், திருமால்பூரிலிருந்து முற்பகல் 11.05-க்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.28, 12.40, 1, 1.45-க்கு புறப்படுவதற்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு சென்றடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web