செம... குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூட்டைப் பூச்சி... விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியில், நம் வீட்டின் மெத்தைகளிலும் விரிப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் மூட்டைப் பூச்சிகள், மனித ரத்தத்தில் உள்ள DNA-வை 45 நாட்கள் வரை அப்படியே சேமித்து வைக்கும் திறன் கொண்டவை என தெரியவந்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் குற்றப்பாதையில் கிடைக்கும் இப்பூச்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்பதால் புலனாய்வில் புதிய சாத்தியங்கள் திறக்கப்பட்டுள்ளன. மனித ரத்தத்தை உறிஞ்சிய பின் நகர்வும் குறையும் இப்பூச்சிகள் ஓடிச் செல்லாமல் குற்றப்பாதையில் நீண்டநேரம் இருப்பதால் ஆதாரமோடு சிக்கவைக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
‘Cimex hemipterus’ எனப்படும் வெப்பமண்டல மூட்டைப் பூச்சிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. STR, SNP குறியீடுகளைப் பிரித்தெடுத்து பாலினம், கண் நிறம், முடி மற்றும் தோல் நிறம் போன்ற உடலியல் விவரங்களையும் கண்டறிய முடியும் என்பது இந்த ஆய்வின் முக்கிய வெளிப்பாடு. கொசுக்கள் போல பறக்க இயலாமை, ரத்தம் குடித்த பிறகு 20 அடி பரப்புக்குள் மட்டுமே அசைவதற்கான வரம்பு ஆகியவை இவற்றை புலனாய்வில் சிறந்த ‘தடய சேமிப்பாளர்களாக’ மாற்றக்கூடியதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பை வழிகாட்டிய பூச்சியியல் நிபுணர் அப்துல் ஹாஃபிஸ் அப் மஜீத் கூறியதாவது – “மலாய் மொழியில் மூட்டைப் பூச்சிகள் ‘போர்வைக்குள் இருக்கும் எதிரி’ என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இவை இனி குற்றங்களை வெளிச்சம் பார்க்கச் செய்யும் ஒற்றர்களாக மாறலாம்.” தாய்த்து வைத்தாலும், குற்றத்தில் பயன்பட 45 நாட்கள் வரையிலான சாமர்த்தியம் மட்டுமே என்பதையும் ஹாஃபிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு உலக தடயவியல் துறையில் புதிய கதவுகள் திறக்கக்கூடியதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
