ஜனவரி 1 முதல் ஸ்லீப்பர் பயணிகளுக்கும் பெட்‌ஷீட், தலையணை சேவை!

 
ரயில்
 

ரயில் பயணமே பொதுமக்களுக்கு எப்போதும் பாதுகாப்பானதும் சிரமமில்லாததுமான அனுபவமாக இருந்து வருகிறது. பேருந்து, கார் போன்ற வசதிகள் இருந்தாலும் ரயிலின் சவாரி தரும் நிம்மதி தனித்துவமானது. தினந்தோறும் கோடிக்கணக்கானோர் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு ரயில்வே புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கான தொடர்ச்சியாக, இதுவரை ஏ.சி பெட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பெட்‌ஷீட்–தலையணை வசதி இப்போது ஸ்லீப்பர் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவல் படி, 2025 ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு, தேவையெனில் கட்டண அடிப்படையில் புது, சுத்தமான படுக்கைத் துணி மற்றும் தலையணை வழங்கப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்பது சிறப்பு. ஸ்லீப்பர் பயணிகளின் சுகாதாரமும், பயண வசதியும் உயர்த்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக, மூன்றாண்டு காலம் சென்னையில் இருந்து ஓடும் 10 ரயில்களில் இந்த சேவை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ₹28 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில்கள் இந்த சேவையில் முதற்கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. படுக்கைத் துணி, தலையணை, உறை சேர்த்து ₹50, தனி தலையணை ₹30, தனி பெட்‌ஷீட் ₹20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை ரயில் பயணிகளிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!