கூட்டணியில் எலியாக இருப்பதை விட சிங்கமாய் தனித்து கர்ஜனை செய்வது மேல்... சீமான் ஆவேசம்!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனையடுத்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கச்சத்தீவு குறித்து, அனைத்து குற்றங்களையும் செய்த நபர், கோயில் திருவிழாவில் கொட்டடித்ததும் சாமியாடி புனிதர் ஆவதை போன்று, தேர்தல் திருவிழாவின் போது கச்சத்தீவை கையில் எடுத்து கொள்கின்றனர். ஒன்றுக்கும் ஒத்துவராத இடம் என்று சொல்வோர்கள் இலங்கை எதற்காக அதை வைத்துள்ளனர். இந்திரா காந்தி கச்சத்தீவுக்கு பதிலாக பெற்ற இடம் என்னவாக இருக்கும். தான்தோன்றித் தனமாக நிலத்தை கொடுத்து விட்டனர். அதனை தொடர்ந்து வலுக்கட்டாயமாக ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்டது.
தேர்தலின் போது எங்கள் மீது பேரன்பு கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு பிரதமர் செல்கிறார், அங்க கச்சத்தீவு குறித்து பேசுவாரா? கச்சத்தீவுக்கான தீர்மானம் வெற்றுத் தீர்மானம். பல தீர்மானங்கள் உறங்குகின்றது. அதேபோல் தான் இது. 4 ஆண்டு காலத்தில் மீனவர்கள் பாதிக்கப்பட்டு தான் வந்தார்கள் அதற்கு எதிராக மாநாடு, பேரணி நடத்த முடியுமா! செய்தார்களா? மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டால் தமிழக மீனவன் எனக் கூறிவிடும் நீங்கள், இந்திய மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்று சொல்ல தயாராக இருக்கிறார்களா?.
ஆனால், அயர்லாந்து போன்ற நாடுகள் குடியுரிமை வழங்கி கவுரவித்து வருகின்றனர். வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு கூட்டணி கட்சி சார்பில் ஆதரவு தான் வழங்குவார்கள், ஆனால், நடுநிலையும் இந்திய நாட்டை அடிமையாக வைத்த இங்கிலாந்தினர் ஐபிஎல் விளையாட அனுமதி, ஆனால், பாகிஸ்தானுக்கு ஐபிஎல் விளையாட்டு தடை, இப்படியாக தான் அரசியல் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். அரசியல் நாடகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. தேர்தலில் கூட்டணி இல்லாமல் வெல்வதை விட, சிறந்த கொள்கைக்கு ஆதரவாக 8 கோடி மக்கள் எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும். கூட்டணியில் எலியாக இருப்பதை விட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜனை செய்வது மேல். நான் சிங்கம் இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!