பெங்களூரு விமான நிலையத்தில் இனி கன்னடம், ஆங்கிலம் மட்டுமே... இந்திக்கு ’நோ’ !

 
 பெங்களூரு விமான நிலையத்தில் இனி கன்னடம், ஆங்கிலம் மட்டுமே... இந்திக்கு ’நோ’  !
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும்  அறிவிப்புப் பலகைகளில் இருந்து இந்தி மொழி நீக்கப்பட்டுள்ளது.  தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தனது அனைத்து அறிவிப்புப் பலகைகளில் இருந்தும் இந்தி நீக்கப்பட்டுள்ளது.  இப்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இதற்கு மக்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


இந்த நடவடிக்கை கன்னட மொழிக்கு ஊக்கம் அளிப்பதாக சிலர் பாராட்டுக்களை தெரிவித்தனர். ஆனால் இது சர்வதேச விமான நிலையத்தில் மற்றவர்களை ஒதுக்குவது போல் இருப்பதாக பலர் விமர்சித்தனர். இதுகுறித்து  , "ஆங்கிலம் மற்றும் கன்னடம் தெரிந்தவர்கள் மட்டுமே பெங்களூருவுக்கு வருகிறார்கள் என நினைக்கிறீர்களா? மெட்ரோ நிலையங்களில் இந்தி இல்லாவிட்டால் பரவாயில்லை, ஆனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அது இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 
மற்றொரு பயனர், "துபாய் இளவரசர் இந்தியாவின் மரியாதையை வெளிப்படுத்த இந்தியில் ட்வீட் செய்கிறார், ஆனால் நம் குடிமக்களே இந்தியை புறக்கணித்து விடுகின்றனர்.   அதே நேரத்தில் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம்
 
சமூக வலைதளங்களில்  இது குறித்த வீடியோ வைரலாகி  விவாதம் தொடங்கியது. விமான நிலையத்தில் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் தகவல்கள் காட்டப்பட்டன, ஆனால் இந்தியில் இல்லை. 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தி பேசும் நாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக  பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web