பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்... முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 
 மன்மோகன் சிங்

கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர் உரையாற்றும் போது  பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தை டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.  

 மன்மோகன் சிங்

கல்வி, பொருளாதாரத்துக்கு அவர் செய்த பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிப்பட்டன. அவரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பது அவருக்கு கர்நாடகம் செய்யும் அஞ்சலியாக கருதப்படுகிறது.மேலும், பல்கலைக்கழகத்துடன் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி. கல்லூரி ஆகியவை உறுப்புக் கல்லூரிகளாக இணைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.  

 மன்மோகன் சிங்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 2024  டிசம்பர் 26ம் தேதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்பால் காலமானார்.
அப்போது, மன்மோகன் சிங்கின் பெயரை மத்திய கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட வேண்டும் என பிரதமர்   மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியிருந்தனர். இதன் பேரில் தற்போது அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பது து குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web