கொடைக்கானலில் குணா குகை, பேரிஜம் ஏரி செல்லத் தடை... வனத்துறை திடீர் அறிவிப்பு!
Jun 27, 2025, 13:05 IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் வனத்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் முகாமிட்டுள்ளன.
இதனால் வனத்துறையினர் தீவிரமாக யானைகளைக் கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மேயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், பேரிஜம் ஏரி சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!