நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

இளையதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67வது படமான லியோவில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபடர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்ததிரைப் டத்தில் நடிகர் விஜய்யுடன் , த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உட்பட பாலிவுட் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கிவிட்டது.
OSAKA Tamil Film Festival Awards! pic.twitter.com/hXxaSIoDwJ
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 21, 2023
இதனையடுத்து நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பில் யுவன்சங்கர்ராஜா இசையில் தனது 68வது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது தலைவி படத்துக்காக கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படத்திற்கான விருது சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்பட உள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!