நெருங்கிய நண்பர்... அருமையான மனிதர்... நடிகர் ரஜினி இரங்கல் செய்தி!
நடிகர் ராஜேஷ் திடீர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் ராஜேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரது அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த மனவேதனையை தருகிறது. அருமையான மனிதர். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
— Rajinikanth (@rajinikanth) May 29, 2025
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.#ActorRajesh
தமிழ் திரையுலகில் ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்து வந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்து வந்தார்.

இன்று காலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் ராஜேஷ், வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ்.
150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
