சூப்பர்!! உலகின் மிகச்சிறந்த புகைப்படத்தை எடுத்த இந்திய வம்சாவளி கலைஞருக்கு விருது!!

 
கார்த்திக் சுப்ரமணியம்

ஆண்டுதோறும் நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறது. இதனை புகைப்பட கலைஞர்கள் பெரும் கௌரவமாக பார்க்கின்றனர். இதற்காக புகைப்பட கலைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு நேர்த்தியான  புகைப்படங்களை எடுத்து காட்சிப்படுத்துவர்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார்.இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் புகைப்படத்துக்காக நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் விருதுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என்ற நான்கு வகைகளில் கிட்டத்தட்ட 5,000 படங்கள் போட்டியில் பங்கேற்றன.

கார்த்திக் சுப்ரமணியம்

அதில் கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த புகைப்படங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் அலாஸ்காவின் சில்காட் பால்ட் என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்பபட தொகுப்பிற்கு வெண்தலைக் கழுகுகளின் நடனம் (Dance of Bald Eagles) என்று புகைப்பட கலைஞர் கார்த்திக் சுப்ரமணியன் தலைப்பு வைத்துள்ளார். அவர் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web