ஆஸ்கார் விழாவில் இந்திய நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!

 
தீபிகா படுகோன் ஆஸ்கார்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோனும், விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகை தீபிகா படுகோனும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கடந்த 2006ல் வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தீபிகா படுகோன், அதன் பின்னர் 2007ல்  நடன இயக்குநர்  ஃபாரா கான் இயக்கத்தில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார். நடிகர் ஷாருக்கானின் இந்த படம், தீபிகாவை இந்திய மொழிகளில் பிரபலமாக்கி, ரசிகர்கள் தீபிகாவை கொண்டாடத் துவங்கினார்கள்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

Deepika

தீபிகா படுகோன் சமீபத்தில்  கெஹ்ரையான், 83, பதான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு, ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் தீபிகா படுகோனே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே, 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருது வென்ற பிரபலங்களுக்கு விருது வழங்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web