வாழ்த்துக்கள்... எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!

தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவருக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் 100க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். தனது 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக 2018 ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன.
மே 1 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படும் என பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!