உஷார்.. இன்று வந்தே பாரத், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட 13 முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்!
அரக்கோணம் வழிதடத்தில் பயணிப்பவராக இருந்தால் இந்த மாற்றங்களைத் தெரிஞ்சுக்கோங்க. அதற்கேற்ப உங்கள் பயண திட்டத்தை வகுத்துக்கோங்க. ஜோலார்பேட்டை மற்றும் தொட்டம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் மிக முக்கிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இன்று மார்ச் 24ம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று இந்த இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, பயணிகளின் விருப்பமான சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில், இன்று பிற்பகல் 2:15 மணிக்குக் கிளம்புவதற்குப் பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக மாலை 4:15 மணிக்குத் தான் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை - சென்னை விரைவு ரயிலும் 2 மணி நேரம் காலதாமதமாகவே இயக்கப்படும்.

தானியங்கி சிக்னல் பணிகளால் சில ரயில்கள் இடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும், மேலும் 3 ரயில்கள் மாற்றுப் பாதையிலும் திருப்பி விடப்பட உள்ளன. ரயில்களின் இந்தத் திடீர் மாற்றத்தால் இன்று பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், ரயில்வே உதவி எண் 139 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களின் ரயில்களின் நிலையை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
"ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும் மாற்றவே இந்தச் சிக்னல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்" என ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
