உஷார்... திருப்பதியில் 1 மணிநேரத்தில் 3 இடங்களில் செயின் பறிப்பு!

 
நகைப்பறிப்பு

திருப்பதியின் முக்கியச் சாலைகளான அலிபிரி, எம்.ஆர்.பள்ளி மற்றும் ரேணிகுண்டா சாலைகளில் பட்டப்பகலிலேயே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

கரகம்பாடி சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். ரேணிகுண்டா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை மறித்துச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

அலிபிரி மற்றும் எம்.ஆர்.பள்ளி பகுதிகளிலும் இதேபோன்று அடுத்தடுத்து சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரே கும்பல் திட்டமிட்டு இந்தத் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நகை கொள்ளை

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொள்ளையர்கள் தங்களின் கவனத்தைச் சங்கிலி பறிப்புப் பக்கம் திருப்பியுள்ளனர். அண்டை மாநிலங்களிலிருந்து வரும் முகமூடி அணிந்த கொள்ளையர்களின் நடமாட்டம் திருப்பதியில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சங்கிலி பறிப்பு மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களாகப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்துத் திருடும் சம்பவங்களும் திருப்பதியில் அதிகரித்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!