உஷார்... நாளை முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட 5 ரயில்கள் மதுரை வழியே செல்லாது!
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, டிசம்பர் மாதம் முழுவதும் மதுரை ரயில்வே கோட்டத்தின் வழியாகச் செல்லும் 5 முக்கிய ரயில்களின் வழித்தடத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த ரயில்கள் மதுரை சந்திப்புக்கு வராது என்றும், அதற்குப் பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாகத் திருப்பி விடப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில் முக்கியப் பணிகளுக்காகச் 'சீரான நேரத் தடை' (Fixed Time Corridor Block) ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 2025 முழுவதும் நடைபெறும் இந்த ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகளுக்காகவே மதுரை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், மதுரை சந்திப்புக்கு வர வேண்டிய இந்த 5 ரயில்களும் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய பகுதிகள் வழியாகத் திருப்பி விடப்படுகின்றன.

டிசம்பர் மாதம் முழுவதும் வாராந்திர மற்றும் தினசரி ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில முக்கிய ரயில்களின் விவரம்:
1. குருவாயூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16128): மாற்றத்தின் நாட்கள்: நவம்பர் 30 முதல் டிசம்பர் 28 வரை (சில நாட்கள் தவிர).
தவிர்க்கப்படும் நிறுத்தங்கள்: மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.
2. நாகர்கோவில் - மும்பை CST எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16352): மாற்றத்தின் நாட்கள்: டிசம்பர் 04, 07, 11, 14, 18, 21, 28 ஆகிய தேதிகளில்.
தவிர்க்கப்படும் நிறுத்தங்கள்: மதுரை மற்றும் திண்டுக்கல்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.

3. கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12666): மாற்றத்தின் நாட்கள்: டிசம்பர் 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில்.
தவிர்க்கப்படும் நிறுத்தங்கள்: மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.
4. நாகர்கோவில் - மும்பை CST எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16340): மாற்றத்தின் நாட்கள்: டிசம்பரில் 01, 05, 08, 12, 15, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில்.
தவிர்க்கப்படும் நிறுத்தங்கள்: மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி.
வழித்தட மாற்றம் மட்டுமின்றி, மதுரை வழியாகச் செல்லும் ஒரு ரயில் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 22631 மதுரை - பிகானீர் எக்ஸ்பிரஸ்: டிசம்பர் 04, 11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12:05 மணிக்குக் கிளம்ப வேண்டிய ரயில், 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்குக் கிளம்பும்.
மதுரை வழியாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தங்கள் பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
