உஷார்... செம்பருத்தி பூ விழுங்கியதில் 6 மாத குழந்தை உயிரிழப்பு!

 
செம்பருத்தி செம்பருத்தி

பெற்றோர்களே உஷார்... கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே, தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 6 மாத ஆண் குழந்தை, காய வைத்திருந்த செம்பருத்தி பூவை விழுங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. 

மைசூரைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் நவ்யா தம்பதியரின் 6 மாத குழந்தை சின்மயி. வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் பூஜை அறை கதவில் வைக்கப்பட்டிருந்த வாடிப்போன செம்பருத்தி பூவை எடுத்து விளையாடிய குழந்தை, விளையாட்டுத்தனமாக வாயில் போட்டு அதக்கியிருக்கிறான். இதில் செம்பருத்தி பூவின் காம்பு பகுதி சிக்கியுள்ளது. 

சமையல் அறையில் தாய் நவ்யா வேலை செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் அண்ணன் தம்பியின் வாயில் பூவின் காம்பு சிக்கியிருப்பதைப் பார்த்து எடுக்க முயற்சி செய்துள்ளான். ஆனால், அந்தக் காம்பு குழந்தையின் தொண்டையில் ஆழமாகச் சிக்கிக் கொண்டதால் சிறுவனால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

செம்பருத்தி

பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுவாசப் பாதையில் பூவின் காம்பு சிக்கியிருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

மருத்துவர்களின் தீவிர முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 6 மாதக் குழந்தை சின்மயி பரிதாபமாக உயிரிழந்தான். தன் கண் முன்னாலேயே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து உன்சூர் புறநகர்க் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!