உஷார்... நாளை முதல் அமலுக்கு வரும் 7 முக்கிய மாற்றங்கள்!
நாளை பிப்ரவரி 1ம் தேதி முதல் உங்கள் பாக்கெட் மற்றும் வங்கி கணக்குகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 7 மிக முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
1. மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்
நாளை (பிப்ரவரி 1) ஞாயிற்றுக்கிழமை என்றாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா? தங்கம் மற்றும் சிலிண்டர் விலை குறையுமா? என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாகும்.

2. செயலற்ற வங்கி கணக்குகள் முடக்கம்
ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிமுறைப்படி, 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்தவிதப் பணப் பரிவர்த்தனையும் (Transactions) செய்யப்படாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் மற்றும் 'இன்-ஆக்டிவ்' கணக்குகள் நாளை முதல் முடக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமானால், இன்றே ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்தோ அல்லது பரிமாற்றம் செய்தோ அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. ஃபாஸ்டாக் (FASTag) புதிய விதிமுறை
சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க, பிப்ரவரி 1 முதல் கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டாக்குகளுக்கு KYC தேவைப்படாது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. வாகனத்தின் விவரங்கள் நேரடியாக 'வாஹன்' (VAHAN) இணையதளம் மூலம் சரிபார்க்கப்படும் என்பதால், இனி ஃபாஸ்டாக் வாங்குவது எளிதாகும்.
4. பந்தன் வங்கி இருப்புத் தொகை மாற்றம்
பந்தன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குச் சலுகை அளிக்கும் விதமாக, ஸ்டாண்டர்ட் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ₹5,000-லிருந்து ₹2,000-ஆகக் குறைத்துள்ளது. நாளை முதல் உங்கள் கணக்கில் ₹2,000 இருந்தால் போதுமானது; அதற்குக் குறைவாக இருந்தால் 0.3% அபராதம் விதிக்கப்படும்.
5. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 31) முடிவடைகிறது. இன்றுக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலிழந்ததாக (Inoperative) அறிவிக்கப்படும். இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரித் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

6. சிலிண்டர் விலை மாற்றம்
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை மாற்றியமைக்கும். கடந்த ஜனவரி 1-ல் வணிக ரீதியான சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், நாளை பிப்ரவரி 1-ல் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7. பிப்ரவரி மாத வங்கி விடுமுறைகள்
ரிசர்வ் வங்கியின் காலண்டர் படி, பிப்ரவரி 2026-ல் தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தைப்பூசம் (பிப்ரவரி 1) போன்ற உள்ளூர் விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது. நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் தைப்பூசம் என்பதால் தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
