உஷார்... நெல்லை, தூத்துக்குடியைத் தொடர்ந்து கலங்க போகுது மதுரை... அதிகனமழைக்கான எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 150 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை
மக்களே... பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்க. மழைக்காலங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மழைக்கு ஒதுங்குவதாக மரத்தின் கீழோ, பாழடைந்த கட்டிடங்களின் கீழோ நிற்காதீங்க.

தென் இலங்கை கடற்கரை  அருகே  வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  கடந்த 2 நாட்களாக தொடர்கனமழை பெய்து வருகிறது. மழை இடைவிடாது கொட்டிக்கொண்டே இருப்பதால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவருகின்றன.  தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் 20 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. போர்க்கால அடிப்படையில்  மீட்புக்குழுக்கள் மக்களை மீட்டு வருகின்றன.   மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் கிடையாது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் 40000   கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.  எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  

மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்  அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நிரம்பிவழிகின்றன.   தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.    தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டு வருகின்றனர்.  கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.  

மழை

தூத்துக்குடி மாவட்டத்தில்  காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர், திருச்செந்தூரில் 67 சென்டிமீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 62 செமீ, கோயில்பட்டியில் 49.5 சென்டிமீட்டர், சாத்தான்குளத்தில் 46.6 சென்டிமீட்டர், தூத்துக்குடியில் 36.1 சென்டிமீட்டர், ஒட்டப்பிடாரத்தில் 35.6 செமீ, கடம்பூரில் 34.8 செமீ, குலசேகரப்பட்டினத்தில் 32.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.   இந்நிலையில், மதுரை மாவட்டத்திற்கும் அதிகனமழைக்கான அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web