உஷார்... இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்!

 
சிசிடிவி குளியல் அறை குளியலறை பாத்ரூம் செல்போன் மிரட்டல் பாலியல் செக்ஸ் சிசிடிவி குளியல் அறை குளியலறை பாத்ரூம் செல்போன் மிரட்டல் பாலியல் செக்ஸ்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதனைக் குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதிப் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு, இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறித் தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்த இளம்பெண், வீட்டிற்குள் சென்று குளிப்பதற்காகக் குளியல் அறைக்குச் சென்றுள்ளார்.

லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

குளியலை முடித்துவிட்டு அவர் தலையைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, குளியல் அறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒரு மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சத்தமிட்டதால், பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

வீட்டுக்குள் வந்து தன்னைப் பின்தொடர்ந்து இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து அந்த இளம்பெண் உடனடியாகத் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பெண்ணை செல்போனில் வீடியோ எடுக்க வந்த நபர், அவர் ஏறி வந்த ஆட்டோவின் டிரைவர்தான் என்பது உறுதியானது.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

அந்த ஆட்டோ டிரைவர், திருவனந்தபுரம், வெடி வச்சான் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜிபின் (35) என்பதும் தெரியவந்தது. ஆட்டோவில் அழைத்து வந்த பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்து சென்று, அவர் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததைக் கண்டுபிடித்த போலீசார், உடனடியாக ஜிபினைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜிபினிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்து, இந்தச் செயலில் அவர் வேறு யாருடனும் தொடர்பு வைத்திருக்கிறாரா அல்லது இதுபோன்ற செயல்களை வேறு யாரிடமாவது செய்திருக்கிறாரா என்ற கோணத்தில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!