உஷார்... இன்று முதல் பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண்கள் மாற்றம்!
பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் நகரங்களை இணைக்கும் 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரெயிலின் எண்கள் இன்று (டிசம்பர் 3, 2025) முதல் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாகச் சேலம் இரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த ரெயில் இப்போது பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பயணிகள் குழப்பமடையாமல் சரியான எண்ணைப் பயன்படுத்திப் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயிலின் பழைய எண் 12677-க்கு பதிலாக, புதிய எண் 16377 இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதேபோல, எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ரெயிலின் பழைய எண் 12678-க்கு பதிலாக, புதிய எண் 16378 இன்று முதல் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த ரெயில் எண் மாற்றம், ரெயிலின் நேரம், வழித்தடம் அல்லது பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்த புதிய ரெயில் எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பழைய எண்ணில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
