உஷார்... நாய் கடித்ததை மறைத்த 9ம் வகுப்பு மாணவன், ரேபிஸ் பாதித்து உயிரிழப்பு.. காஞ்சிபுரத்தில் சோகம்!

 
தெருநாய்

பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒரு சிறுவன் செய்த சிறு தவறு, இன்று அவனது உயிரையே பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சபரிவாசன் (15), அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று சபரிவாசனை கடித்துள்ளது. லேசான காயம் ஏற்பட்ட நிலையில், "வீட்டில் தெரிந்தால் அடிப்பார்கள்" என்ற பயத்தில் சிறுவன் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளான்.

நாய் நாய்கள் தெருநாய்

கடந்த சில நாட்களாகச் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரைப் பார்த்தால் பயப்படுவது மற்றும் நாய் போலச் சத்தமிடுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதிர்ச்சியடைந்த தந்தை பாஸ்கர், சிறுவனைக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், ரேபிஸ் வைரஸ் சிறுவனின் நரம்பு மண்டலத்தை முழுமையாகப் பாதித்துள்ளதைக் கண்டறிந்தனர்.

நிலைமை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கும் சபரிவாசன் கொண்டு செல்லப்பட்டான். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நோய் முற்றிய நிலையில் இருந்ததால் சபரிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!