உஷார்... இன்று முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்... 20°C வரை வெப்பநிலை வரை குறையும் - வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் இன்று டிசம்பர் 12ம் தேதி முதல் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து குளிரின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னையில் இன்று டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 15 வரை, மீண்டும் டிசம்பர் 19 முதல் 22 வரை என இரண்டு காலகட்டங்களில் வெப்பநிலை 20°C வரை குறைந்து குளிர்ச்சி நிலவ வாய்ப்புள்ளது.

வேலூர், கரூர் மற்றும் சேலம் போன்ற உள் மாவட்டங்களில் வெப்பநிலை 15°C வரை குறையக்கூடும் என்றும், திருச்சி மற்றும் மதுரையில் வெப்பநிலை 17°C வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, வரும் டிசம்பர் 16ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கிறிஸ்துமஸ் பண்டிகை வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், டிசம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இதே தேதிகளில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
