உஷார் மக்களே... வீடு புகுந்து 19 சவரன் நகைகள் பறிப்பு.. போலீசார் விசாரணை!

பத்திரமாக இருங்க மக்களே... தெரியாதவர்களை அத்தனை எளிதில் நம்பி வீட்டிற்குள் அனுமதிக்காதீங்க. தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து, வீட்டிற்குள் தனியே இருந்த பெண்மணியைத் தாக்கி, அவரிடம் இருந்து 19 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை 6 மணிக்கு வாக்கிங் சென்று விட்ட நிலையில், வீட்டில் அவரது மனைவி முனியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி வீடுபுகுந்து முனியம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச்செயின், மற்றும் கைகளில் அணிந்திருந்த 4 பவுன் வளையல் என 19 பவுன் நகைகளை பறித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனியம்மாள் கூச்சலிட்டுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம். இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!