உஷார்... போலி பார்க்கிங் ரசீது அச்சடித்து மோசடி.. 2 பேர் கைது!

 
பார்க்கிங்

கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில், போலி பார்க்கிங் ரசீதுகளைத் தயாரித்து சுற்றுலாப் பயணிகளிடம் பல நாட்களாகப் பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்த இரு வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் போலி ரசீது கொடுத்துப் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் முருகேஷ் (24) மற்றும் கணேஷ் (22) ஆகிய இரு வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் எந்தவித அனுமதியும் இல்லாமல் கள்ள ரசீதுகளைத் தயாரித்து, அவற்றை வைத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்துத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

கன்னியாகுமரி

இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்த போலி ரசீதுகள் மற்றும் வசூலித்த பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!