உஷார்... இன்று முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு தேதிகளில் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
1. குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) ஜனவரி 7, 8, 9, 10, 12 முதல் 24 வரை மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் இந்த ரெயில் கோட்டையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரெயில் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா ரெயில் நிலையங்களுக்குச் செல்லாது.
ஜனவரி 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை (ஜனவரி 6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 ஆகிய தேதிகள் தவிர்த்து) மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. அதே சமயம் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

2. சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16127) பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த ரயில் கீழ்க்கண்ட தேதிகளில் தாமதமாகச் சென்றடையும்:
ஜனவரி 3, 10: 30 நிமிடம் தாமதம்.
ஜனவரி 5, 7, 14: 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதம்.
ஜனவரி 8, 12: 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்.
ஜனவரி 9, 13: 1 மணி நேரம் தாமதம்.
ஜனவரி 16: 20 நிமிடம் தாமதம்.
ஜனவரி 20, 23, 26: 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதம்.

3. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ஏ.சி. எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22207):
ஜனவரி 9, 16, 23 ஆகிய தேதிகளில் இந்த ரெயில் கோட்டையம் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். இதனால் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா நிலையங்களுக்கு இந்த ரெயில் செல்லாது.
ரயில் நேரங்கள் மற்றும் வழித்தட மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பயணிகள் ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம், NTES செயலி அல்லது IRCTC இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
