உஷார்... இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர்!
சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்த அவலநிலை, விடுதிகளில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். பணிக்காகச் சென்னை வந்திருந்த அவர், சென்ட்ரல் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த லாட்ஜில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற ஊழியர், ஜன்னல் வழியாக ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

ஊழியரின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். பின்னர் வெளியே வந்து அந்த ஊழியரின் செல்போனைப் பிடுங்கி ஆய்வு செய்துள்ளார். சாமர்த்தியமாகச் செயல்பட்ட அந்த ஊழியர், அந்தப் பெண்ணை எடுத்த வீடியோவை உடனடியாக அழித்து விட்டார். இருப்பினும், அந்தப் பெண் விடாமல் அவரது செல்போனைப் பிடுங்கி சோதனை செய்த போது அதில், வேறு சில பெண்கள் லாட்ஜ் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது எடுத்த வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்தன. இதன் மூலம் அந்த ஊழியர் தொடர்ச்சியாக இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் சம்பவம் குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தனஞ்செய்பதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்தனர். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
